ETV Bharat / state

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற மதுரை ஆதீனம் - dharmapuram adhinam

மதுரை ஆதீனத்திற்கு, தருமபுரம் ஆதீனம் நேற்றிரவு தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை வழங்கினார்.

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற மதுரை ஆதீனம்

author img

By

Published : Aug 27, 2021, 4:28 PM IST

Updated : Aug 28, 2021, 9:07 AM IST

மயிலாடுதுறை: உடல்நலக்குறைவு காரணமாக காலமான மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்தில் தருமபுரம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்நின்று கடந்த 14ஆம் தேதி குரு மூர்த்தம் செய்துவைத்தார்.

அதன் முன்னதாக மதுரை ஆதீனத்தில் 293ஆவது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகத்தினை தருமபுரம் ஆதீனம் முன்நின்று நடத்திவைத்து தீட்ஷையும் வழங்கினார்.

தருமபுரம் ஆதீனத்திற்கு சிறப்பு வரவேற்பு

மதுரை ஆதீனம் 293ஆவது மடாதிபதிகள் நேற்றிரவு (ஆக.26) மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை புரிந்து எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு மடத்தின் ஊழியர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

அதன் பின்னர் தருமபுரம் ஆதீன மடாதிபதிகள் 27ஆவது குருமகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். அவருக்கு தருமபுரம் 27ஆவது மடாதிபதிகள் தாய் வீட்டு சீதனமாக கோபம், காமம், லோகம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு தீய குணங்களை வென்றதற்கு இணங்க தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை மடாதிபதி வழங்கினார்.

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற மதுரை ஆதீனம்

அதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் செவிகளில் தருமபுரம் தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் திருக்கரங்களால் ஆறு கட்டி சுந்தர வளையத்தை அணிந்து கொண்டு 27ஆவது மடாதிபதியிடம் ஆசி பெற்றார்.

இதையும் படிங்க: மதுரை ஆதீனம்: 293ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்கும் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமி

Last Updated : Aug 28, 2021, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.