ETV Bharat / state

'மாவீரன் வன்னியர் சங்கத் தலைவர்' உள்பட 100 பேர் கைது! - பாமக நிறுவனர் ராமதாஸ்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் மாவீரன் வன்னியர் சங்க தலைவர் உள்பட 100 பேரை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

மாவீரன் வன்னியர் சங்க தலைவர் உட்பட 100 பேர் கைது

author img

By

Published : Oct 18, 2020, 7:31 PM IST

வன்னியர் சங்க இடஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூட்டில் இறந்த 21 தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாவீரன் வன்னியர் சங்கம் சார்பில் வீடுகள் கட்டிகொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் வில்லியநல்லூரை சேர்ந்த தியாகி ராஜேந்திரன் குடும்பத்திற்கு கான்கிரீட் வீடு கட்டிகொடுப்பதற்காக தளவாடப் பொருள்களை அனுப்பி வைத்துவிட்டு மாவீரன் வன்னியர் சங்க தலைவர் விஜிகே.மணிகண்டன், வன்னியர் சத்திரியர் சங்க தலைவர் ராஜன் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு இன்று(அக்.18) ஏற்பாடு செய்திருந்தனர்.

மாவீரன் வன்னியர் சங்க தலைவர் உட்பட 100 பேர் கைது

அதற்காக மயிலாடுதுறை வழுவூரில் இருந்து மாவீரன் வன்னியர் சங்கத் தலைவர் விஜிகே மணிகண்டன் தலைமையில் வன்னியர் சத்திரியர் சங்க தலைவர் ராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் வில்லியநல்லூருக்கு இன்று(அக்.18) மதியம் புறப்பட்டனர்.

அவர்களை மயிலாடுதுறை காவல் துறையினர் மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் தடுத்து நிறுத்தி விஜிகே மணிகண்டன் உள்பட 100 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாவீரன் வன்னியர் சங்கத் தலைவர் விஜிகே.மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வன்னியர்கள் இடஒதுக்கீட்டிற்காக 1987ஆம் ஆண்டு சாலை மறியலில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 தியாகிகளின் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகட்டி கொடுக்க வேண்டுமென்று மாவீரன் வன்னியர் சங்கம் முடிவெடுத்தது.

இந்நிலையில், புதுச்சத்திரம் வில்லியநல்லூரை சேர்ந்த தியாகி ராஜேந்திரன் மனைவி செல்வராணி என்பவருக்கு வீடுகட்டிகொடுப்பதற்காக அடிக்கல்நாட்டு விழாவிற்கு புறப்பட்டபோது, சட்டம்ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் தூண்டுதல் பெயரில் மயிலாடுதுறையிலேயே காவல் துறையினர் தடுத்துநிறுத்தி கைது செய்துள்ளனர்.

வன்னியர்களுக்காக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதுவும் செய்யாதபோது மாவீரன் வன்னியர் சங்கம் வீடுகட்டிகொடுப்பதையும் தடுத்துநிறுத்துகிறார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய அவதாரம் எடுத்த பிரபல நடிகை - 50 பெண் பிரபலங்கள் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.