ETV Bharat / state

'விரைவில் சசிகலா தலைமையில் அதிமுக இயங்கும்' - Sasikala political

இரட்டைத் தலைமையின்கீழ் அதிமுக செயல்பட முடியாது. அதிமுக விரைவில் சசிகலா தலைமையின்கீழ் இயங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ADMK will be led by Sasikala
ADMK will be led by Sasikala
author img

By

Published : Jul 13, 2021, 10:53 PM IST

மயிலாடுதுறை: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கொங்குநாடு விவகாரம் என்பது ட்ரையல் பலூன்

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொங்குநாடு என்று பிரிப்பதற்கு இப்பொழுது யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அதனை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்காது. இதனை டிரையல் பலூனாக வேறு ஏதோ காரணத்துக்காக விடுகிறார்கள்.

தேவையற்றது நீட்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட் என்பது தேவையற்ற ஒன்று, ஆனால் சட்டரீதியாக அதனைச் சந்திக்க வேண்டிய எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாடு உள்ளது. இந்த ஆண்டில் முடியாவிட்டாலும், அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசின் முயற்சி வெற்றிபெறும்.

யூனியன் என்பதன் அர்த்தம் என்ன?

ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறு என்று கூறுபவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக உள்ளனர். யூனியன் பட்ஜெட் அதாவது ஒன்றிய பட்ஜெட் என்ற பெயரிலேயே பட்ஜெட் போடப்படுகிறது. யூனியன் மினிஸ்டர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றார்கள். ஆகவே ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை.

3 தவறான முடிவுகள்

தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசின் மூன்று தவறான முடிவுகளே காரணம். திடீர் பண மதிப்பிழப்பு, குழப்பமான ஜிஎஸ்டி, முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு. இதன் காரணமாக அனைத்துத் தொழில்களும் முடங்கின.

தொழில்கள் மூலம் வரி வருவாய் வராத காரணத்தால் 130 கோடி மக்களிடம் வரி விதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் வரியை விதித்துள்ளது.

விசுவாசமானவர்களுக்கான பிரதமர்

வாஜ்பாய், அத்வானி காலத்திலிருந்து கட்சிக்காகப் போராடியவர்களை ஓரம் கட்டிவிட்டு தனக்கு விசுவாசமானவர்களுக்கு மட்டுமே மோடி பதவி வழங்கி உள்ளார். தேசிய கட்சிக்கு மாநிலத்துக்கு மாநிலம் கருத்துகள் மாறுபடும்.

சசிகலாவின் ஒற்றைத் தலைமை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேகதாது பிரச்சினையில் தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாகச் செயல்படுவோம். இரட்டைத் தலைமையின்கீழ் அதிமுக செயல்பட முடியாது. தற்போது நடைபெறும் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது அதிமுக விரைவில் சசிகலா தலைமையின்கீழ் இயங்கும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.