நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த குமாரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசன் (19). இவரும், அதே ஊரைச் சேர்ந்த சுமன்ராஜ் (17) என்பவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், இருவரும் மாலை வேலை முடிந்து திருக்கடையூரில் இருந்து தங்களின் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, திருக்கடையூர் மஞ்சளாறு கிளை வாய்க்கால் அருகே எதிரே அதிவேகமாக சவுடு மண் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற சுமன்ராஜ் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மாரிசன், படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சவுடு மண் ஏற்றி வந்து விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநரான காரைக்கால் தலத்தெருவைச் சேர்ந்த ஐய்யப்பனைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.