மயிலாடுதுறை: சீர்காழி தாலுக்கா தொடுவாய் கிராமத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு காவலர்கள், நேற்று (மார்ச் 1) வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த சரக்கு லாரியை மறித்து சோதனையிட முயன்றனர்.
காவலர்களை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர், சற்று தூரம் சென்று லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது லாரியை சோதனை செய்த காவலர்கள், லாரியில் சுமார் 90 பெட்டிகளில் 4,300 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்தனர்.
இதையடுத்து மதுபாட்டில்களுடன் லாரியை பறிமுதல் செய்து, காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தன. விசாரணையில், தொடுவாய் பகுதியைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி கங்காவிற்காக, மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கங்காவை கைது செய்த சீர்காழி மதுவிலக்கு காவலர்கள், தப்பி ஓடிய மற்றொரு சாராய வியாபாரியான முகேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளநோட்டு கில்லாடி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கைது