ETV Bharat / state

வழக்காடி, வணிகர்களிடம் பாராட்டுப் பெற்ற நகராட்சி! - சாலை அமைக்கும் பணி

நாகை: மயிலாடுதுறையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முதல்முறையாக சாலை அமைக்கும் பணி தீர்ப்பு பெற்ற வழக்காடி, வணிகர்கள் மயிலாடுதுறை நகராட்சிக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

வக்கீல் மற்றும் வணிகர்களிடம் பாராட்டுப் பெற்ற நகராட்சி

author img

By

Published : Aug 28, 2020, 10:33 AM IST

மயிலாடுதுறையில் கடந்தாண்டு சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றபோது, ஏற்கெனவே இருந்த சாலையை பெயர்த்து எடுக்காமல், பழைய சாலை மீதே மீண்டும் புதிய சாலை அமைக்கப்பட்டது.

இதை எதிர்த்து, மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் செந்தில்வேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இவ்வழக்கில் தமிழ்நாடு முழுவதும் புதிய சாலை அமைக்கும் பணியின்போது, பழைய சாலைகளை பெயர்த்து எடுத்துவிட்டு உயரத்தை அதிகரிக்காமல் புதிய சாலையை அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பாக மயிலாடுதுறையிலேயே சாலை அமைக்கும்போது நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணியை மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவரும், வழக்காடியுமான செந்தில்வேல் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முதல் மணிக்கூண்டு வரை 700 மீட்டர் தொலைவுக்கு 55 லட்ச ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்பணிக்காக பழைய சாலை சுமார் ஒரு அடி ஆழம் தோண்டப்பட்டு, விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுவருகிறது.

இதையடுத்து, சாலை அமைக்கும் இடத்துக்கு வழக்காடியான செந்தில்வேல், வணிகர்கள் நேரில் பார்வையிட்டு மயிலாடுதுறை நகராட்சிக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் இதேபோல் சாலைப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.