ETV Bharat / state

சம்பா சாகுபடி காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள் - சம்பா சாகுபடி காப்பீடு

விவசாயிகள் சம்பா பயிர்களுக்கான காப்பீடு செய்ய வருகின்ற 15ஆம் தேதியே கடைசி நாள் என்பதால் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடி காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள்

author img

By

Published : Nov 2, 2022, 10:02 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 2.20 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பா தாளடி நடவு பணிகள் பெரும்பாலான இடங்களில் முடிவடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 282 கிராமங்களில் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 526 ரூபாய் பரிமீயம்தொகை செலுத்தி பயிர்காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

சம்பா சாகுபடி காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள்

பயிர்காப்பீடு செய்வதற்கு விஏஓ வழங்கும் சிட்டாஅடங்கல், வங்கி பாஸ்புத்தகம் நகல், ஆதார்அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து முன்மொழிவு விண்ணப்பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுசேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்துகொள்ளலாம். காப்பீடு செய்யும் போது நிலத்தின் புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்ததுகொள்ள வேண்டும்.

நடப்பாண்டிற்கு வரும் 15 ஆம் தேதி காப்பீடு செய்வதற்கு கடைசிநாள் அதுவரை காத்திராமல் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் உடனடியாக விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து பயன்பெற வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காப்பீட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளரை 9790004303 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தேசியப்பழங்குடியினர் நடன விழா; கவனம் ஈர்த்த பாரம்பரிய நடனங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.