ETV Bharat / state

நில அபகரிப்பு புகார்: 2ஆவது முறையாக கைதுசெய்யப்பட்ட திமுக பிரமுகர் - திமுக பிரமுகர் தாமஸ் ஆல்வா எடிசன் கைது

நாகப்பட்டினம்: நில அபகரிப்பு புகாரில் இரண்டாவது முறையாக திமுக பிரமுகர் தாமஸ் ஆல்வா எடிசன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Land grab
Land grab
author img

By

Published : Dec 19, 2020, 12:48 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரிய நாட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் முன்னாள் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவராகவும், தற்போதைய கீழையூர் ஒன்றிய திமுக செயலாளராகவும் உள்ளார். இவர் மீது, கடந்த செப்டம்பர் மாதம் அதிமுவின் நகரச் செயலாளர் வழக்கறிஞர் தங்க. கதிரவன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 2 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்து உள்ளதாக நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் செய்தார்.

Land grab
தாமஸ் ஆல்வா எடிசன் கைது

அதனைத் தொடர்ந்து தாமஸ் ஆல்வா எடிசன் உள்பட ஆறு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாமஸ் ஆல்வா எடிசனை கைதுசெய்தனர். இந்த நிலையில், வடக்கு பொய்கை நல்லூர் பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவர் கடந்த 11ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், தங்கள் தந்தை ராஜமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான 39 1/2 சென்ட் நிலத்தை, தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தை ஆரோக்கியராஜ் என்பவர் அவரது மகன் மரிய நிக்சன் என்பவருக்கு போலி ஆவணம் மூலமாக செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளதாகவும், கடந்த மாதம் 10ஆம் தேதி குடும்பத்தினருடன் தங்களுக்குச் சொந்தமான இடத்தை பார்க்கச் சென்றபோது, தாமஸ் ஆல்வா எடிசன் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும் கூறினார்.

மேலும் இது பற்றி புகார் செய்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Land grab
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன்

இந்தப் புகாரின் பேரில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணங்கள் மூலமாக நிலத்தை அபகரித்தல், நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தாமஸ் ஆல்வா எடிசனை இரண்டாவது முறையாக நில மோசடி வழக்கில் கைதுசெய்துள்ளனர்.

கைதை தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். இந்தத் தகவலை அறிந்த ஏராளமான திமுகவினர் மருத்துவமனையில் குவிந்துவருவதால், காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.