மயிலாடுதுறை : ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் லில்லிபாய். கணவனால் கைவிடப்படட்ட இவர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், அரசால் குடியுரிமை வழங்கப்பட்ட பட்டா இடத்தில் தொண்டு நிறுவனம் மூலம் கட்டிகொடுக்கப்பட்ட ராஜாமணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் போக்கியத்திற்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்து குடியிருந்து வந்தேன்.
அந்த வீட்டை செல்வம் என்பவருக்கு ராஜாமணி விற்றதால், ராஜாமணி உதவியுடன் செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் வெங்கடாச்சலம், கலியபெருமாள் மற்றும் சிலர் தன்னை வீட்டைவிட்டு வெளியே தள்ளி பூட்டிவிட்டனர்.
வீட்டில் உள்ள நகைபணம் பொருட்களை எடுக்கவிடாமல் மிரட்டி தன்னை துரத்தி விட்டனர். தான்கொடுத்த போக்கிய பணத்தை திரும்ப பெற்று தனக்கு நியாயம் வழங்கு வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், முறைகேடாக ஆச்சாள்புரத்தில் குடியுரிமை பட்டா பெற்றுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனிபிரிவு முதல் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் என அனைத்து துறை அலுவலர்களிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக மீண்டும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த லில்லிபாய், தன்புகார் தொடர்பாக விசாரணை செய்த ஆனைக்காரன்சத்திரம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரகுராமன் தன்னை படுக்கைக்கு அழைத்து, மிரட்டுவதாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் லில்லிபாய் தெரிவிக்கையில், ”சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தன்னிடம் நடந்துகொண்டது குறித்து வாய்மொழியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கூறினேன். புகார் தேவையில்லை நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஆரணி டிஎஸ்பி-க்கு சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மன் ரத்து