ETV Bharat / state

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையா?.. பொதுமக்கள் கூறுவது என்ன?

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறையால் அவதிபட்டு வருவதாவும் சுகாதாரத் துறை மற்றும் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Mayiladuthurai
மயிலாடுதுறை
author img

By

Published : Aug 19, 2023, 12:04 PM IST

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை தனி மாவட்டமானது. பின்னர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் என அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு தமிழக அரசால் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அரசு மருத்துவமனைக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் 70 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில், 70 செவிலியர்களும், 40 மருத்துவர்கள் உள்ளதாகவும், அதிலும் 34 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: IRCTC: போலி ஐஆர்சிடிசி ஆப் மூலம் பயணிகளை குறிவைத்து பலே மோசடி.. எச்சரிக்கும் சைபர் போலீஸ்!

மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், தொழில்நுட்ப வல்லூனர்கள் மற்றும் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிபடுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மயிலாடுதுறை மருத்துவமனையில் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை என்று நோயாளிகளை கொண்டு வந்தால் முதலுதவி அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக 80 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சை அரசு மருத்துவமனைக்கும், 40 கி.மீ தொலைவில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல வேண்டி அறிவுறுத்தப்படுதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இதயநோய், நரம்பியல், நெப்பாலிஸ்ட், சிறுநீரக கோளாறு, குடல் இறக்கம், முளை நரம்பியல் போன்றவற்றிற்கான சிறப்பு மருத்துவர்கள் யாரும் இங்கு கிடையாது எனக் கூறப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு நோயாளிகளை கொண்டு வந்தால் அவர்களுக்கு எக்கோ எடுப்பதற்கான வசதிகள் கூட இங்கு இல்லை என குறிப்பிடப்படுகிறது. எக்ஸ்ரே, ஸ்கேன் என்று இயந்திரங்கள் இருந்தும் அதை கையாள போதிய தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், காலை 8 மணி முதல் மதியம் 1 மணிக்கு மேல் மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை எடுப்பதற்கு டெக்னிஷியன்கள் இருப்பது இல்லை என்றும் இதனால் ஏழை எளிய மக்கள் தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் அவசர சிகிச்சைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், உபகரணங்கள் போன்றவை இல்லாததால் தஞ்சை, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதனால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இதயநோய் மற்றும் அனைத்து நோய் மருத்துவர்கள், தேவையான செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பணி அமர்த்தி தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் இதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் ரோபோக்கள் கட்டிய 3D தொழில்நுட்பத்திலான தபால் நிலையம்! அப்படி என்ன ஸ்பெஷல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.