நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், கும்பகோணம் நாடக நடிகர்கள் சங்கத்தின் 51ஆவது ஆண்டு விழா மாநாடு, டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 97ஆம் ஆண்டு குரு பூஜை, மாயவரம் எம்.கே.டி. பாகவதரின் 110ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு, சங்கரதாஸ் சுவாமிகள், மாயவரம் எம்.கே.டி. பாகவதர் உள்ளிட்டோரின் திருவுருவப் படத்திற்கு நாடகக் கலைஞர்கள், சங்கப் பொறுப்பாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து நாடகக்கலைஞர்களுக்கு 'கலைச்சுடர் ஒளி' எனும் பட்டம் வழங்கப்பட்டது. இதையடுத்து நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், சம்பூர்ண அரிச்சந்திரா நாடகம் ஆகியவை நடைபெற்றது. மதுரை, கோவை, சென்னை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நாடகக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் 78 வயதான அன்னியூர் சண்முகம் என்ற முதியவரின் கரகாட்ட நிகழ்ச்சி, நாட்டுப்புறக் கலைஞர் ஒருவரின் காவடி ஆட்டம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. தலையில் காவடியை வைத்தபடி பம்பரமாகச் சுற்றிச் சுழன்றும், காவடியின் உள்ளே புகுந்து தலைகீழாக நின்றபடி இளைஞர் செய்த சாகச நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க... மியான்மர் அதிபர் புத்தகயா பயணம்