ETV Bharat / state

ரூ.8 கோடி செலவில் 41 இடங்களில் குடிமராமத்து பணிகள் தொடக்கம் - kudimaramathu schemes

நாகை: மயிலாடுதுறை காவிரி வடிநிலக் கோட்டம் சார்பிலும், விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் 41 இடங்களில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

குடிமராமத்து பணிகள்
author img

By

Published : Jul 16, 2019, 8:15 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள வாய்க்கால்களில் செடிகளை அகற்றி, மதகுகளை சரிசெய்யும் பணிகள் தற்போது பொதுப்பணித்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள் சார்பில், இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணியின் ஒப்பந்த தொகையில் விவசாயிகளின் பங்களிப்பாக 10 சதவீதமும், மீதமுள்ள 90 சதவீதம் அரசாங்க பணமும் சேர்த்து இந்த பணிகள் நடைபெறுகின்றன.

காவிரி வடிநிலக் கோட்டம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில், மாத்தூர், ஆதனூர், சங்கரன்பந்தல் உள்ளிட்ட 41 இடங்களில் இந்த குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.8 கோடி செலவில் நடைப்பெற்று வரும் இந்த பணிகள் மூலம் ஆறுகள், வாய்க்கால்கள் பராமரிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Intro:நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி வடிநிலக் கோட்டம் சார்பில், விவசாயிகளின் 10 சதவிகித பங்களிப்புடன் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 41 இடங்களில் குடி மராமத்து பணிகள் துவக்கம்:-

Body:ஆறுகளிலிருந்து தண்ணீர் செல்லும் வாய்க்கால்களில் செடிகளை அகற்றி, மதகுகளை சரிசெய்யும் பணி தற்போது பொதுப்பணித்துறை சார்பில் துவக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள் சார்பில், இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணியின் ஒப்பந்த தொகையில் விவசாயிகளின் பங்களிப்பாக 10 சதவிகிதமும், மீதமுள்ள 90 சதவிகிதம் அரசாங்க பணமும் சேர்த்து இந்த பணிகள் நடைபெறுகின்றன. காவிரி வடிநிலக் கோட்டம் சார்பில் மயிலாடுதுறை கோட்டத்தில் மாத்தூர் ஆதனூர் சங்கரன்பந்தல் உள்ளிட்ட 41 இடங்களில் இந்த பணிகள் இன்று துவக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் முடியும் வகையில் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆறுகள் வாய்க்கால்கள் விவசாயிகள் மூலம் பராமரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.