நாகை மாவட்டத்திற்குள்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளுர் திருமருகல் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுப்பணித் துறை, நீர் ஆதாரத் துறை மூலம் திருக்கண்ணங்குடி ஒடம்போக்கி ஆறு, பெருங்கடம்பனூர் தேவநதி வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகள், கட்டுமான பணிகளை குடிமராமத்து திட்டப் பணிகள் சிறப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை முதன்மைச் செயலருமான சந்திரமோகன் நேரில் ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "நாகை மாவட்டத்தில் இந்தாண்டு 51 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க இன்னும் 14 நாள்களே உள்ளதால் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைவரை சேரும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் A மற்றும் B வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுவருகின்றன.
அப்பணிகள் முடிவடைந்த பின்னர், தண்ணீர் வந்து சேராத C வாய்க்கால்கள் தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஓரிரு நாளில் குடிமராமத்து பணி தொடங்கும் - அமைச்சர் காமராஜ்