மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு எனப்படும் கருப்பறியலூரில் உள்ள பழமையான குற்றம்பொறுத்தநாதர் கோயில் சம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயக் குறவர்களால் தேவாரம் பாடப்பெற்று, ராவணனின் தந்தை வரம்பெற்ற தலமாகவும் விளங்குகிறது.
இது ராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர, ராமர் சிவலிங்க பூஜை செய்த ஆலயமும் ஆகும். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயில் கடைசியாக 1953 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 25 வது குருமகா சந்நிதானம் காலத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
அதன்பிறகு 70 ஆண்டுகளுக்குப் பின், தற்போது கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஆக.19 ஆம் தேதி தொடங்கிய குடமுழுக்கு விழா 6 கால யாகசாலை பூஜைகளுடன் இன்று (ஆக.22) காலை நடந்தது. இதன் நிறைவாக மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு, புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு, விமான கும்பத்தை அடைந்து மகா குடமுழுக்கு நடைபெற்றது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
இதையும் படிங்க: பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு