ETV Bharat / state

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய மீனவர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 18 நாகை மீனவர்கள் நேற்று சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இலங்கையில் இருந்து விடுதலையான 18 நாகப்பட்டினம் மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர், 18 nagapattinam fishermen released from sri lanka, fishermen relased, 18 tamil fishermen released from sri lankan captivity
நாடு திரும்பிய மீனவர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு
author img

By

Published : Nov 28, 2021, 7:39 AM IST

நாகப்பட்டினம்: கடந்த அக்டோபர் 13ஆம் தேதி இலங்கை அரசால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களின் 18 மீனவர்கள் சில நாள்களுக்கு முன்பு இலங்கை அரசால் விடுதலைசெய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் இலங்கையிலிருந்து விமானம் மூலம் நேற்று (நவம்பர் 27) சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

மீனவர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு

அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை

அங்கிருந்து, 18 மீனவர்கள் நேற்று மாலை சொந்த கிராமத்திற்கு வந்தடைந்தனர். நாகை மீன்பிடி துறைமுகம் வந்த மீனவர்களை கிராம நிர்வாகிகள், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த மாநில அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். மேலும், இலங்கை வசம் சிக்கியுள்ள இரண்டு படகுகளையும் விரைந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: களத்தில் உங்களோடு நானும் நிற்பேன்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.