ETV Bharat / state

14 வயது சிறுமியை கடத்திய இளைஞர் மீது பாய்ந்த போக்சோ - sexual harassment

மயிலாடுதுறை தரங்கம்பாடி அருகே 14 வயது சிறுமியைக் கடத்திய இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

14 வயது சிறுமியை கடத்தியவர் கைது  மயிலாடுதுறை செய்திகள்  மயிலாடுதுறையில் 14 வயது சிறுமியை கடத்தியவர் கைது  சிறுமியை கடத்தியவர் கைது  14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது  mayiladuthurai news  mayiladuthurai latest news  kidnapper of a 14-year-old girl was arrested in pocso act  kidnapper  mayiladuthurai kidnapper of a 14-year-old girl was arrested in pocso act  kidnapper of a 14-year-old girl was arrested  crime news  sexual harassment  பாலியில் வன்புணர்வு
14 வயது சிறுமியை கடத்தியவர்
author img

By

Published : Jul 14, 2021, 1:43 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா பூதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஐயப்பன் (20). இவர் 14 வயது சிறுமி ஒருவருடன் நீண்ட நாள்களாக நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவரது வீட்டிற்குச் சென்ற ஐயப்பன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி கடத்திச் சென்றுள்ளார்.

இதையடுத்து வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோர், வீட்டில் சிறுமியைக் காணாமல் பல இடங்களில் தேடியுள்ளனர். தொடர்ந்து எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், இது குறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஐயப்பன் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து பூதனூர் கிராமத்தில் ஐயப்பனின் உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு, ஐயப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்ட காவலர்கள் அவரை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.