நாகை மாவட்டம் நீர்மூலை கிழக்கு கடற்கரை சாலையில் புகழ்பெற்ற செய்யது முபாரக் ஒலியுல்லா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவின் 48ஆம் ஆண்டு கந்தூரிப்பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடி ஊர்வலம் தாரை தப்பட்டையுடன் முக்கிய வீதிகள் வழியாக தர்கா வந்தடைந்தது.
முன்னதாக வரும் வழியில் பொதுமக்கள் மலர்களை தூவி சாதி, சமய வேறுபாடின்றி வழிபாடு செய்தனர். பின்னர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு, பழமையான பாரம்பரிய கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது வண்ணமிகு வாண வேடிக்கைகள் நடைபெற்றன.
கொடியேற்றத்தில் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலத்துடன் சந்தனம் பூசும் விழா வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையுடன் படிங்க; 21 அரிவாள் மீது 68 முறை நடந்து அருள்வாக்கு கூறிய பூசாரி