ETV Bharat / state

காப்பீட்டுக் கழக தனியார் மயமாக்கலை அதிமுக ஆதரித்தது ஏன்? - கார்த்தி சிதம்பரம் கேள்வி

மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற ராஜிவ் காந்தியின் 77ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காப்பீட்டு கழக தனியார் மயமாக்கலை அதிமுக ஆதரித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம்

author img

By

Published : Aug 20, 2021, 8:18 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ராஜிவ்காந்தியின் 77ஆவது பிறந்தநாள் விழா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (ஆக.20) கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அப்போது மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, கார்த்தி சிதம்பரம் மரியாதை செலுத்தினார். விழாவுக்குப் பின்னர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்துக்கு வரவேற்பு

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளபோது திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதியான ரேஷன் கார்டுக்கு ரூ. 4 ஆயிரத்தை அனைவருக்கும் வழங்கியுள்ளனர்.

பெட்ரோல் விலையில் மூன்று ரூபாயை குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கையின் மூலம் தமிழ்நாட்டின் நிதி நிலை எடுத்துக்கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்ட பட்ஜெட் முழு பட்ஜெட் அல்ல, அரையாண்டு பட்ஜெட்தான்.

ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கார்த்தி சிதம்பரம்
ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கார்த்தி சிதம்பரம்

இதன் மூலம் எந்த திசையை நோக்கி அரசு செல்கிறது என்பதை தெளிவாக கூறியுள்ளனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை முழுமனதாக வரவேற்கிறேன். யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் செய்யலாம்.

ஓபிஎஸ் நேரடி விவாதம் நடத்தட்டும்

இந்த திட்டம் நவீன தமிழ்நாட்டுக்கும், நவீன இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும். இந்த திட்டத்தில் ஏற்கனவே பணியில் இருக்கும் யாரையும் பணியில் இருந்து நீக்கவில்லை. அதிமுக வெள்ளை அறிக்கையை குறைகூறுகிறது.

வெள்ளை அறிக்கையின் புள்ளி விவரங்கள் தவறு என அதிமுக முன்னாள் நிதி அமைச்சர் நினைத்தால், அவர் புள்ளி விவரங்களை வெளியிட்டு, இன்றிருக்கும் நிதி அமைச்சருடன் நேரடி விவாதம் நடத்தலாம்.

காப்பீட்டுக் கழகங்களை தனியார் மயமாக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனை காங்கிரஸ் லோக் சபாவில் எதிர்த்த நிலையில், அறுதி பெரும்பான்மையை பயன்படுத்தி அந்த சட்ட மசோதவை நிறைவேற்றியுள்ளனர்.

மசோதவை ஆதரித்து வாக்களித்தது ஏன்?

ராஜ்யசபாவில் பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலைக்குழுவுக்கு அனுப்ப கேட்டுக்கொண்டனர். பாஜகவை வாடிக்கையாக ஆதரிக்கும் பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் ஆகிய கட்சிகள் கூட இதனை எதிர்த்தன.

இருப்பினும் அரசு இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுகவானது பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து, காப்பீட்டுக் கழகங்களை தனியார் மயமாக்க ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக சார்பில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. எந்த காரணத்துக்காக அந்த மசோதவை ஆதரித்து அதிமுக வாக்களித்தது என்பதனை அவர்கள் விளக்க வேண்டும். அதிமுக தொழிற்சங்கள் இதனை ஆதரிக்கின்றவா? என அதிமுக விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை அணுகலாம் - ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.