ETV Bharat / state

எண்ணெய் கிணறுகள் அமைக்க முயற்சிப்பதை தடுத்த நிறுத்த வலியுறுத்தல் - mayiladyuthurai news

காவிரிப் படுகையின் 7 மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயுக் குழாய்கள் அமைக்க ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் முயற்சிப்பதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர்  மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு  மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்  jayaraman press meet against methane  methane  press meet against methane  mayiladyuthurai news  mayiladuthurai latest news
மீத்தேன்
author img

By

Published : Sep 17, 2021, 7:22 AM IST

மயிலாடுதுறையில் மீத்தேன்திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “காவிரிப் படுகையை அழித்துவிட எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் துடியாய் துடிக்கின்றன. கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

தமிழ்நாட்டில் எண்ணூர் முதல் தூத்துக்குடிவரை எண்ணெய், எரிவாயுக் குழாய் எடுத்து செல்லக்கூடிய குழாய்களை நிலத்தடியில் அமைக்கப்படும் என்றும், அதற்காக 6 மாவட்டங்களில் இப்போது குழாய் அமைக்கவிருப்பதாகவும் அந்த அறிவிக்கை தெரிவிக்கப்படிருந்தது.

விவசாயிகளின் நிலத்தில் எண்ணெய் குழாய்

மேலும், குழாய்கள் பதிக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய இடத்தை வழங்குவதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிப்பதற்கான வாய்ப்பை வழங்கவில்லை.

கடலூர், கள்ளகுறிச்சி, அரியலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில், 14 வட்டங்களில் 77 ஊர்களில் பலநூறு விவசாயிகளின் நிலத்தில் குழாய்களைப் பதிக்க உள்ளனர்.

இந்த குழாய்களை பதித்துவிட்டால் 99 ஆண்டுகள்வரை இடத்தின் பயன்பாட்டு உரிமையை அந்த நிறுவனம் பெற்றுவிடும். குழாய் பதித்துவிட்டால் மரம் நடுதல், கிணறு அமைத்தல் என எதுவும் செய்யமுடியாது.

வாகனங்கள் சென்று குழாயில் கசிவு ஏற்பட்டால் 3 ஆண்டுகள் முதல் ஆயுள்தண்டனை வரை விதிக்கலாம் என்று விதிமுறைகளை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இதனை செயல்படுத்த அனுமதிக்க முடியாது.

எரிவாயு திட்டங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்

காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது. ஆனால், இதை மதிக்காமல் எண்ணை நிறுவனங்கள் அடாவடி செய்கின்றன.

தமிழ்நாடு அரசு விவசாயிகளையும், விவசாயத்தையும் கண் இமைகளை பாதுகாப்பது போன்று பாதுகாப்போம் என்று கூறியுள்ளது. எந்தவித ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார்.

எண்ணெய் கிணறுகளை அனுமதிக்காத நிலையில் எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்களை அமைக்க அனுமதித்தால் ஆபத்து காத்துள்ளது. புதிய எண்ணெய் கிணறுகள் மட்டுமின்றி பழைய எண்ணெய் எரிவாயு திட்டங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். காவிரிப்படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் என்ற வரம்பிற்க்குள் கொண்டுவரவேண்டும் . உடனடியாக தமிழ்நாடு அரசு தலையிட்டு குழாய் பதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கே.சி.வீரமணி வீட்டில் பணம், நகை, ஆவணங்கள் பறிமுதல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.