மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறையில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு நேற்றிரவு(பிப்.2) பூஜைகளை முடித்துவிட்டு கோவில் நடையை மூடிவிட்டு பூசாரி வீரமணி வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று(பிப்.1) காலை கோவிலுக்கு வந்த பூசாரி, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்கையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த அம்மன் பட்டுப்புடவை, 4 கிராம் மதிப்புள்ள தங்க காசுகள், வெண்கல ஐயப்பன் சிலை திருடு போனது தெரியவந்தது. மேலும், வெளிப்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணத்தைத் திருடுபோகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான குழுவினர், திருட்டு நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.