குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர், மாணவர்கள் உள்ளிட்டோர் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் எதிரே இஸ்லாமியர்கள், முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பினர் தலைமையில் உரிமைகளை நிலைநாட்டவும், மத ரீதியாக இந்தியாவை பிளவுபடுத்தும் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.
இதில் வஃக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர் செல்வம், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.