குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும் அதனைத் திரும்பப் பெறக் கூறியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கிளியனூர் இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடி ஏந்தி பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கிளியனூரில் உள்ள அகரவல்லம் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணியில் 70 அடி நீள தேசியக் கொடியை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தவாறு மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், புதிய சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களித்த அதிமுக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பெரிய பள்ளிவாசல் முன்பு முடிவடைந்தது. அங்கு தேசியக் கொடியை பள்ளிவாசல் வாயிலில் உயரத்தில் பறக்கவிட்டு, தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இப்பேரணியில் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய பெண்கள், இந்துக்கள் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியை முன்னிட்டு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஃபேஸ்புக் காதல்: கனடா நாட்டுப் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்