ETV Bharat / state

அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பு: போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

நாகப்பட்டினம்: உள்ளாட்சித் தேர்தலையொட்டி அமைச்சர் ஓ.எஎஸ். மணியன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டபோது, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

minister os manian
minister os manian
author img

By

Published : Dec 21, 2019, 6:45 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதால், அதிமுக , திமுக, சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சிக்கல், பொரவச்சேரி, ஆழியூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின்போது ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு

பொரவச்சேரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ராஜசேகர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மாலதி ஆகியோரை ஆதரித்து பரப்புரை செய்தார். வாக்கு சேகரிப்பின்போது ஆழியூர் அருகே நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், அரைமணி நேரம் பேருந்து, கார், உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதையும் படிங்க: நத்தம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை!

Intro:நாகையில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் தீவிர வாக்கு சேகரிப்பு ; தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.Body:நாகையில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் தீவிர வாக்கு சேகரிப்பு ; தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

நாகையில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து அதிமுக , திமுக, சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருப்பகுதியாக நாகையில் சிக்கல், பொரவச்சேரி, ஆழியூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொரவச்சேரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டி ராஜசேகர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மாலதி ஆகியோருக்கு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆழியூர் அருகே நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரை மணிநேரம் பேருந்து, கார், உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் போலீசார் நீண்ட நேரம் போராடி போக்குவரத்தை சீர் செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.