மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையோரம் குறைமாதத்தில் பிறந்த சிசு ஒன்று இறந்த நிலையில் கிடந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், சிசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிசுவை நாய் ஒன்று தூக்கி வந்ததாக தெரிவித்தனர். மேலும், இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயிலில் வீசப்பட்ட 3 நாள்களே ஆன ஆண் குழந்தை... போலீஸ் விசாரணை!