அலோபதி மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவத்தை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அதன் கிளை தலைவர் பாரதிதாசன் தலைமை வகித்தார். அவருடன் மருத்துவர்கள் முத்து, மருதப்பன், பரத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது அவர்கள் அலோபதி மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவத்தை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 11ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டிராக்டர், மாட்டு வண்டிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி