ETV Bharat / state

’எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ அமைச்சரிடம் கதறிய பெண்கள்! - நாகப்பட்டினம் அண்மைச் செய்திகள்

நாகப்பட்டினம்: நடுக்கடலில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை அளித்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், ”எப்படியாவது காப்பாத்துங்க ஐயா” என, மீனவ பெண்கள் காலில் விழுந்து கதறியது காண்போரை கண்கலங்க வைத்தது.

காலில் விழுந்து அழும் பெண்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

author img

By

Published : May 19, 2021, 12:15 PM IST

கேரளா மாநிலம், கொச்சின் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகு, கடந்த மே.16ஆம் தேதி டவ்-தே புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த தந்தை, மகன்கள் உள்ளிட்ட ஒன்பது மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர்.

இந்தச் சம்பவத்தால், நாகப்பட்டினம் மாவட்ட மீனவ கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில், மாயமான மீனவர்களின் குடும்பத்தினரைக் கண்டு ஆறுதல் தெரிவிப்பதற்காக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்திற்குச் சென்றார்.

ஆறுதல் கூறிய அமைச்சர்!

அங்கு மாயமான ஒன்பது மீனவர்களின் குடும்பத்திற்கு திமுக சார்பில், ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்கினார். அப்போது அமைச்சரின் காலில் விழுந்த மீனவ பெண்கள், ”எப்படியாவது காப்பாத்துங்க ஐயா” என கதறியது காண்போரை கண்கலங்க வைத்தது.

பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்," “கடலில் மாயமான மீனவர்களை சக மீனவர்களைக் கொண்டே தேட கேரளா அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். வெளிமாநில ஊடகங்களில் மீனவர்கள் கிடைத்து விட்டதாக வரும் தகவல்கள் நம்புபடி இல்லை.

தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார். திமுக சார்பாக ஒன்பது மீனவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, கப்பல் மூலம் மீனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 21,362 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.