மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தின் ஸ்ரீ சட்டநாத சுவாமி தேவஸ்தானத்தில் இன்று (ஆக.21) ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடத்துடன் கூடிய ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையம் திறக்கப்பட்டது. அருள்மிகு சட்டநாதர் கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாகவும் விளங்குகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கிழக்கு சன்னதியில், புதிதாக ரூ.68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாடுடனான சொக்கநாதர் பூஜை மடம், ஸ்ரீலஸ்ரீ கயிலை சுவாமிகள் நிலையம் இன்று காலை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் திறந்து வைத்தார்.
இதனிடையே சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, மங்கள வாத்தியங்கள் இசைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆதின கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு