கரோனா தீநுண்மி தொற்று நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் பிற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகளைக் கண்காணித்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அதில் சிலருக்கு அறிகுறி இருந்தால் அவர்களுக்கு கரோனா தீநுண்மி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்படி பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பொதுமக்கள் நாகை தலைமை அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி அவர்களைப் பல மணிநேரம் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுகளின் வாயில்களில் காக்கவைத்து கரோனா தொற்று இல்லாதவர்களுக்கும் தொற்று ஏற்படும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க...'அரசு மருத்துவமனையில் தனி அறை வேண்டும்' - அடம்பிடிக்கும் ரவுடி பேபி சூர்யா!