நாகை மாவட்டம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் சார்பில் பண்புப்பயிற்சி முகாம் கடந்த மாதம் 26ஆம் தேதியில் தொடங்கியது.
இந்த நிலையில் அதன் மாவட்ட பொறுப்பாளர் துரைசண்முகம்(70) இரவு பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அப்போது அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் 15 பேர் கற்கலை வீசி தாக்கியுள்ளனர். மேலும், பயிற்சி மையத்தின் கேட்டுகளை திறக்க முயற்சித்த அவர்கள், தங்களுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி துரைசண்முகத்தை தரக்குறைவாக திட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர்.
இந்தக் கல்வீச்சு தாக்குதலால் பொறுப்பாளர் துரைசண்முகத்தின் காலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து துரைசண்முகம் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக பயிற்சி முகாம் நடைபெற்ற பள்ளியின் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றம்சாட்டப்பட்ட நபர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டனர்.
அதன்படி, வடகரை பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களான ஜாசிக் (19), முகமது சபிக் (19), முகமதுஅல்பா (18), இஜாஸ்அகமது (18), முகமது இர்பான் (18), அப்துல் பாசிக் ரஹ்மான் (19) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரை தேடிவருகின்றனர்.