ETV Bharat / state

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முளை விட்ட நெல் முட்டைகள் : விவசாயிகள் வேதனை! - அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முளைத்துப்போன நெல் முட்டைகள்

நாகை : விற்பனை செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கியதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

முருகேசன், விவசாயி
முருகேசன், விவசாயி
author img

By

Published : Aug 27, 2020, 6:39 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நல்லத்துக்குடி மட்டுமின்றி செருதியூர், முளப்பாக்கம், அகரகீரங்குடி, மூங்கில் தோட்டம், கோடங்குடி உள்ளிட்ட எட்டு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இங்கு, தினமும் சராசரியாக இரண்டாயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல் கொண்டு வரப்படுகிறது. ஆனால் தினசரி 800 மூட்டைகள் மட்டுமே இங்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் சேமிப்புக் கிடங்கில் 3,000 மூட்டைகளை மட்டுமே அடுக்கி வைக்க இடவசதி உள்ளது. இதனால் கூடுதலாகக் கொண்டு வரப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை, கொள்முதல் நிலையத்திலேயே விவசாயிகள் அடுக்கி வைத்துவிட்டு 15 நாட்களுக்கு மேலாக காத்திருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகள் மட்டுமின்றி, கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் சுமார் ஒரு அடி உயரத்துக்கு தேங்கி நின்ற மழைநீரில் நனைந்து சேதம் அடைந்தது. மேலும், மழையில் நனைந்த இந்த நெல் மூட்டைகள் முளைவிடத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

முருகேசன், விவசாயி

இதனால், உடனடியாக தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், மழையால் நெல் முட்டைகள் பாதிக்கப்படாமல் இருக்க அதிகமான கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க...விவசாயத்தை மேம்படுத்தும் சேலம் மாணாக்கர்களின் புதிய கண்டுபிடிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.