ETV Bharat / state

லியோ கூடுத்தல் கட்டணம் வசூல்; மயிலாடுதுறை ஆட்சியர் புகார் எண் அறிவிப்பு! - vijay

Leo movie ticket: மயிலாடுதுறை மாவட்டத்தில் லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்யும் திரையரங்குகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி புகார் எண்களை வெளியிட்டுள்ளார்

மயிலாடுதுறையில் லியோ டிக்கெட்டிற்கு அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க புகார் எண்கள் வெளியீடு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 10:18 PM IST

மயிலாடுதுறை: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது‌. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

வரும் 19ஆம் தேதி லியோ வெளியாக உள்ள நிலையில் சிறப்பு காட்சிகள், டிக்கெட் விலை என ஒவ்வொன்றாக சர்ச்சையாகி வருகிறது. லியோ படத்துக்கு சிறப்புக் காட்சிகளை ஒளிபரப்ப கேட்டு படக்குழு கோரிக்கை விடுத்த நிலையில், ஒரு நாளைக்கு 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.

அதன்படி லியோ படத்தின் முதல் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் லியோ படத்தின் சிறப்புக்காட்சிகள் குறித்து, தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கப்பட வேண்டும் என்றும், இறுதிக்காட்சி 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகாலை காட்சிக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், லியோ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், ஒரு சில திரையரங்குகளில் ரூ.5000 வரை டிக்கெட் விலை விற்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் 19 முதல் 24ஆம் தேதி ஆகிய நாட்களுக்கு காலை 09.00 மணி முதல் நள்ளிரவு 01:30 மணி வரையில் அதிகபட்சம் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் மட்டும் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற நேரங்களில் கூடுதல் காட்சி இயக்க அனுமதி இல்லை.

மேலும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களின் தகுந்த பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும். முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடுகள் செய்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதிக கட்டணம் வசூல் செய்தல் மற்றும் உணவு மற்றும் தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்த்திட வேண்டும்.

இதில் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்” என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தாலுகாவிற்கு புகார் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் - எண்: 04364-222033, மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் - எண்: 9498100907, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் - எண்: 9442003309, சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் - எண்: 04364 – 270222, சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் - எண்: 9498100908, சீர்காழி காவல் ஆய்வாளர் - எண்: 9498100926 மேற்குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கருகிய பயிரை டிராக்டர் கொண்டு அழிக்கும் விவசாயி! காவிரி தண்ணீர் இல்லாததால் அவலம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.