நாகை மாவட்டம் மயிலாடுதுறை நீடூர் கிராமத்தில் உள்ள ஜாமியா மிஸ்பா ஹல் ஹதா பள்ளிவாசலில் மத ரீதியிலான பரப்புரை மேற்கொள்ள ஃபிரான்ஸ், பெல்ஜீயம், கேமரூன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பத்து பேர், பிகார், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பேர் என மொத்தம் 12 இஸ்லாமியர்கள் வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த திங்கள்கிழமை ரயில் மூலமாக சென்னை செல்ல திட்டமிட்டிருந்தனர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டதால் இவர்கள் அப்பகுதியில் செயல்பட்டுவந்த மதராசாவில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவர்கள் கரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
மேலும் படிங்க: ராமநாதபுரத்தில் 455 பேர் கண்காணிப்பு: ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்!