ETV Bharat / state

சாம்பாரில் எலி மருந்து - வேலைக்காரன் துணையுடன் கணவனைக் கொன்ற மனைவி - வேளங்கண்ணி அருகே கணவனைக் கொன்ற மனைவி

நாகை அருகே வீட்டு வேலைக்காரனுடன் ஏற்பட்ட திருமணம் தாண்டிய உறவிற்காக கணவனையே விஷம் வைத்து மனைவி கொலை செய்து நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பாரில் எலி மருந்தை கலந்து,வேலைக்காரன் துணையுடன் கணவனைக் கொன்ற மனைவி

author img

By

Published : Jan 26, 2022, 9:44 AM IST

நாகப்பட்டிணம் :வேளாங்கண்ணியை அடுத்த சடையன் காட்டை சேர்ந்தவர் தேவேந்திரன். ஒன்றிய குழு உறுப்பினரும் திமுக கிளை செயலாளரான இவர் தனது மனைவி சூர்யாவுடன் வசித்து வந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.

திருச்சியில் உள்ள வெல்கர் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேவேந்திரன் 15.12.2021 அன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். உடல்நிலை தேறி இருந்த தேவேந்திரன் 4.1.2022 அன்று மீண்டும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்குச் சென்றபோது, அவருடைய உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து திருச்சி காவேரி மருத்துவமனையில் அவருடைய உறவினர்கள் தேவேந்திரனை சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அவர் 06.01.2022 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். . பின்னர் இதனால் சோகம் அடைந்த அவருடைய உறவினர்கள் தேவேந்திரன் சடலத்தை வேட்டைக்காரனிருப்பு கொண்டுவந்து மயானத்தில் எரித்து இறுதிச்சடங்கு செய்துள்ளனர்.

வேலைக்காரருடன் திருமணம் தாண்டிய உறவு

தேவேந்திரன் உயிரிழந்து 15 நாட்கள் ஆன நிலையில் அவருடைய மனைவி சூர்யா எந்த கவலையும் இல்லாமல் செல்போனில் தனியாக சிரித்து பேசுவதை அவருடைய உறவினர் சதீஷ்கண்ணா பார்த்து சந்தேகமடைந்து உள்ளார்.

அதனைத் தொடர்ந்து சூர்யா பேசிக் கொண்டிருந்த உயிரிழந்த அவருடைய கணவர் தேவேந்திரனின் செல்போனை அவருடைய உறவினர்கள் சதீஷ்கண்ணா உள்ளிட்டோர் சோதனை செய்து பார்த்த போது, அவருடைய வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடன் சூர்யா அதிகம் பேசிக்கொண்டு இருந்ததை கண்டறிந்தனர்.

பின்னர் சந்திரசேகரை அவருடைய உறவினர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் வேட்டைகாரணிருப்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சூர்யாவுக்கும், வேலைக்காரன் சந்திரசேகரணுக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். மேலும், நடத்திய விசாரணையில் கடந்த 28.12.2021 அன்று சூர்யா மற்றும் சந்திர சேகர் ஆகிய இருவரும் சேர்ந்து தேவேந்திரன் சாப்பிட்ட உணவில் எலி மருந்தை கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து சந்திரசேகரை கைது செய்த வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர், கணவரைக் கொலை செய்த சூர்யாவையும் கைது செய்து வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க:கார் கண்ணாடியை உடைத்த 2 இளைஞர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.