புரெவி புயல் காரணமாக கொள்ளிடம் பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால், அப்பகுதியில் உள்ள பயிர்கள், குடியிருப்புகள் நீரால் பாதிப்படைந்தன. அதனை திருச்சி மண்டல ஐஜி ஜெயராமன், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐஜி ஜெயராமன், "தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர் அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 1,200 காவலர்களும், வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை அலுவலர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
அத்துடன் 500 ஊர்க்காவல் படையினர், 1,200 பேர் தன்னார்வலர்கள் உள்ளனர். சென்னையிலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அமைச்சர் ஜெயக்குமார்!