ETV Bharat / state

மயிலாடுதுறை வீரட்டேஸ்வரர் கோயிலில் சிலைத் திருட்டு தடுப்புப்பிரிவு போலீஸார் விசாரணை! - கோவில் நிர்வாகத்தினரிடம் தீவிர விசாரணை

அமெரிக்காவின் கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலின் வீணாதார தட்சிணாமூர்த்தி சிலை இருப்பது தெரியவந்ததையடுத்து திருச்சி சிலைத் திருட்டு தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் 15 போலீஸார் கோயிலில் ஆய்வு நடத்தினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 2, 2023, 7:13 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் வீரட்டேஸ்வரர் கோயிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை!!

மயிலாடுதுறை: கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத யோகீஸ்வரர் கோயில் உள்ளது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இந்த வீரட்டேஸ்வரர் கோயிலில் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கோயிலில் உள்ள சிலைகள் குறித்து இன்று சோதனை செய்தனர்.

அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் மயிலாடுதுறை மாவட்டம், கொற்கை கிராமத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் உற்சவ மூர்த்திகள் சிலையான வீணாதார தட்சிணாமூர்த்தி உலோகச்சிலை 1970ஆம் ஆண்டு முதல் இருப்பதாக, அந்த அருங்காட்சியகத்தின் வலைதளம் மூலம் சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, இந்தோ-பிரென்ச் இன்ஸ்டியூட் ஆஃப் பாண்டிச்சேரி என்ற அமைப்பால் இக்கோயிலில் 1958ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் உள்ள வீணாதார தட்சிணாமூர்த்தி சிலையின் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தபோது இரண்டும் ஒன்று எனத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிலைத் திருட்டு தடுப்புப்பிரிவு தனிப்படையினர் நடத்திய ரகசிய விசாரணையில் வீணாதார தட்சிணாமூர்த்தி சிலைக்கோயிலில் இருந்து திருடப்பட்டு வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது உறுதியானது. இந்தச் சிலைத் திருடப்பட்டது தொடர்பாக சென்னை சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் கும்பகோணம் சிலை தடுப்புப்பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர், காவல் ஆய்வாளர் கவிதா உள்ளிட்ட 15 பேர் கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் இருந்த 30க்கும் மேற்பட்ட சிலைகளை வரிசைப்படுத்தி ஆய்வு மேற்கொண்டதுடன், சிலைகளின் எண்ணிக்கை, உண்மைத்தன்மை குறித்து கோவில் நிர்வாகத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கோயிலுக்குச் சொந்தமான சிலை என்பதை ஊர்ஜிதம் செய்து வெளிநாட்டு கலை பண்பாட்டுத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏ.டி.எஸ்.பி பாலமுருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் திருடு போன சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.