புரெவி புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. மன்னம்பந்தல் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் தெருவில் தையல்நாயகி என்பவரது வீடு இடிந்து விழுந்தது.
இதில் தையல்நாயகி (42), அவரது மகள் ஆர்த்தி (19) ஆகியோர் படுகாயமடைந்தனர். தற்போது அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: புரெவி புயல்: தண்ணீரில் மிதக்கும் சென்னை!