ETV Bharat / state

இல்லம் தேடி கல்வி - கிராமப்புற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி - நாட்டுப்புற கலைஞர்கள் இல்லம்தேடி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

மயிலாடுதுறையில் மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி கிராமப்புற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மயிலாடுதுறை கோட்டாட்சியர் தொடங்கிவைத்தார்.

கிராமப்புற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கிராமப்புற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
author img

By

Published : Nov 26, 2021, 11:27 AM IST

மயிலாடுதுறை: கரோனா காலத்தில் ஏற்பட்ட மாணவர்களுக்கு உண்டான கற்றல் இடைவெளியைப் போக்க தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கிராமப்புற கலைநிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கோட்டாட்சியர் பாலாஜி தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும் நாட்டுப்புறக் கலைஞர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து வீதி நாடகம், ஒயிலாட்டம், நாட்டுப்புறப் பாடல் வழியாகக் கற்றல் இடைவெளி குறித்தும், கல்வியின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து புதிய பேருந்து நிலையம், பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட நகரில் மக்கள் கூடும் இடங்களில் நாட்டுப்புற கலைஞர்கள் இல்லம் தேடி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

இதையும் படிங்க: Rain Update: எத்தனை மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.