மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் மூலிகை குறுங்காடு உருவாக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றன. இதில், தூதுவளை, ஓமவள்ளி, தவசிக்கீரை, முறிக்கட்டி, வல்லாரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, பிரண்டை, மலைவேம்பு, கற்றாழை, சித்தரத்தை, திப்பிலி உள்ளிட்ட 27 வகையான மூலிகைச் செடிகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டுவைத்தார். மொத்தம்110 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியுடன் இணைந்து மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்!