ETV Bharat / state

ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என மயிலாடுதுறை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம்
author img

By

Published : Jul 31, 2019, 6:40 AM IST

தமிழ்நாட்டில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். ஆனாலும், சிலர் இன்றளவும் ஹெல்மெட் அணிவதை தவிர்கின்றனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் விதமாக, இனி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு மயிலாடுதுறை பங்குகளில் பெட்ரோல் வழங்கப்படாது என மயிலாடுதுறை காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது!

இந்த அறிவிப்பு காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில், மயிலாடுதுறை நகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குளிலும், அறிவிப்பு பலகைகள் மூலம் இத்திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:மயிலாடுதுறையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிப்பு. ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க காவல்துறை நூதன முயற்சி:-Body:தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு காவல்துறை அபராதம் விதிக்கின்றனர். ஆனாலும், சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, இனி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என்ற அறிவிப்பை காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு காவல்துறையினர் கேட்டுகொண்டதன் பேரில் நாகை மாட்டத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை நகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குளிலும், அறிவிப்பு பதாகைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காவல்துறை ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்டி: 1. ஆதவன் - வாகன ஓட்டி.
2. ஸ்ரீராம் - பெட்ரோல் பங்க் உரிமையாளர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.