உலகை அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினர் ஓவியம், குறும்படம், பாடல்கள் என பல்வேறு வகைகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நாகப்பட்டினத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வரும் செல்வம் என்பவர், கர்ணன் படத்தில் வரும் ”உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்ற பாடலின் மெட்டுக்கு கரோனா விழிப்புணர்வு வரிகளை எழுதி பாடலாக பாடியுள்ளார்.
தற்போது அந்த பாடல் பலராலும் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டு சொந்த நாடு திரும்பிய பயணி - கேரளா பெருமிதம்