ETV Bharat / state

வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சென்ற கூடலூர் தலைமை காவலர் பணியிடை நீக்கம் - நீலகிரி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சென்ற கூடலூர் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்
author img

By

Published : Oct 22, 2021, 6:34 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ளது எருமாடு காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சிஜு.

இவர் பணி புரியும் எருமாடு காவல் நிலையம் கூடலூர் அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இவர் கடந்த 9ஆம் தேதி அன்று இரவு கேரள மாநிலம் வயநாடு - நூல்புழா வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அந்த பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதால் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கண்டறிய அங்கே தானியங்கி அதிநவீன கேமராக்கள் கேரள வனத்துறையால் பொருத்தப்பட்டுள்ளன.

வழக்கம் போல வனத்துறையினர் தினமும் காலை தானியங்கி கேமிராக்களை ஆய்வு செய்வது வழக்கம். இதே போல கடந்த 9ஆம் தேதி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு நபர் வேட்டைக்கு துப்பாக்கியுடன் சென்ற புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த கேரள வனத் துறையினர் தொடர்ந்து வயநாடு வனப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். தொடர் ஆய்வு நடத்தியதில் அந்த நபர் தமிழ்நாடு பகுதியில் இருந்து வந்தது தெரிய வந்தது.

வனத்துறை விசாரணை

இதனைத் தொடர்ந்து வனப்பகுதிக்குள் வந்தவர் தலைமை காவலர் என்பதை உறுதி செய்த கேரளா மாநில வயநாடு வனத்துறையினர் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.

அதனை உறுதி செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் இவர்தான் என்பது உறுதி செய்து அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து இவர் யாருடன் வேட்டைக்கு வந்தார் என்பது பற்றி தொடர்ந்து கேரள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள வனப்பகுதியில் துப்பாக்கியுடன் தமிழக காவல்துறை காவலர் சிக்கியிருப்பது மற்ற காவல்துறையின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து தலைமறைவாக உள்ள தலைமைக் காவலரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர் கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி எங்கு உள்ளது, எத்தனை நாள்களாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது பற்றியும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: T23 புலி - தமிழ்நாடு வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.