புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து சுமார் 75 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் எல்லை தாண்டி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இலங்கை மீனவர்கள் ஆறு பேர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் ஆறு பேரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் கடந்த 22ஆம் தேதி நடுக்கடலில் படகுடன் கைதுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று அவர்களை படகுடன் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுவந்த இந்திய கடற்படையினரின் மேற்படி நடவடிக்கைகளுக்காக நாகை கடலோர காவல்படை குழும காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பு: இலங்கை மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திடம் ஒப்படைப்பு! - Nagapattinam Coast Guard Group
நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஆறு பேர் நாகை கடலோர காவல்படை குழும காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.