ETV Bharat / state

அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காமல் தனியார் பேருந்து மீது மோதி விபத்து

நாகை: மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காததால் தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் தனியார் பேருந்தை பின்னே எடுத்துச் சென்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

government bus and private bus accident
government bus and private bus accident
author img

By

Published : Feb 28, 2020, 7:17 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வழுவூரில் பொறையாரிலிருந்து மயிலாடுதுறை நோக்கிவந்த தனியார் பேருந்து வழுவூர் அருகே ஒரு வாகனத்தை முந்திச் சென்றபோது எதிரே திருவாரூர் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்து வந்ததால் தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். ஆனால் அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தும் பிரேக் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைக் கண்ட தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னால் நகர்த்திச் சென்றுள்ளார். ஆனால் அரசுப் பேருந்து பிரேக் பிடித்தும் நிற்காமல் தனியார் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காமல் தனியார் பேருந்து மீது மோதி விபத்து

அங்கு உள்ள பொதுமக்கள் கூறுகையில், ”அரசுப் பேருந்தைச் சரியாகப் பராமரிப்பதில்லை, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய அச்சமாக உள்ளது. பல பேருந்துகளில் பிரேக் பிடிப்பதில்லை” என்று குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க: கானக உயிர்களை காண ஒரு பயணம்....வன உயிர் புகைப்படக்காரர் செந்தில் குமரன் ஷேரிங்ஸ்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.