ETV Bharat / state

அரசுப் பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு - பதற வைக்கும் சிசிடிவி காட்சி! - நாகை மாவட்டச் செய்திகள்

நாகை: தெற்குப்பொய்கை நல்லூர் அருகே அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

nagapatinam
nagapatinam
author img

By

Published : Feb 8, 2020, 5:31 PM IST

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, பூக்காரத் தெருவைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகள் மகரஜோதி (16). பதினொன்றாம் வகுப்பு படித்துவரும் இவர், இன்று காலை தனது உறவினர் வீரமணியுடன் இருசக்கர வாகனத்தில் தெற்குப்பொய்கை நல்லூர், விச்சுமரத்தடி கிழக்குக்கடற்கரைச் சாலையில் சென்றுள்ளார்.

அப்போது, சாலையைக் கடப்பதற்கு வீரமணி முயன்றபோது, அவரது வாகனத்தின் மீது சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் மகரஜோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உறவினர் வீரமணி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்த காட்சிகள் அங்குள்ள வணிக வளாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அக்காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி

இதையும் படிங்க: மதுபோதையில் காரை இயக்கி விபத்து - சி.சி.டி.வி காணொலி வெளியீடு

Intro:நாகை அருகே அரசு பேருந்து மோதி பள்ளி மாணவி பலி.Body:நாகை அருகே அரசு பேருந்து மோதி பள்ளி மாணவி பலி.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, பூக்கார தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரது மகள் மகரஜோதி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் இவர், இன்று காலை தனது உறவினர் வீரமணியுடன் இருசக்கர வாகனத்தில் தெற்குப்பொய்கை நல்லூர், விச்சுமரத்தடி கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வேதாரண்யத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் அங்கிருந்தவர்கள் மகரஜோதியை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மகரஜோதி கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உறவினர் வீரமணி அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், இச்சம்பவம் அங்குள்ள வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவில், இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.