ETV Bharat / state

வேளாங்கண்ணி பெரிய வியாழன் வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

author img

By

Published : Apr 2, 2021, 8:29 AM IST

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய கலையரங்கத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் வழிபாட்டு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

good thursday
பெரிய வியாழன்

உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்கால வழிபாடுகள் தொடங்கின.

இந்நிலையில், தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான பெரிய வியாழன் வழிபாட்டு நிகழ்ச்சி, பேராலய கலையரங்கத்தில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் பிரபாகர் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில், பங்குத்தந்தை அற்புதராஜ் அடிகளார், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம் அடிகளார், உதவி பங்குத் தந்தையர்கள் டேவிட் தன்ராஜ் அடிகளார், ஆண்டோ ஜேசுராஜ் அடிகளார், அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் கலந்துகொண்டனர். இந்த வழிபாட்டில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வேளாங்கண்ணி பெரிய வியாழன் வழிபாடு

இந்நிகழ்வின்போது, அமர்ந்திருக்கும் சீடர்களின் பாதத்தைப் பேராலய அதிபர் கழுவி முத்தமிடுவது வழக்கம். ஆனால், கரோனா தொற்றுப் பரவலின் காரணமாகப் பாதம் கழுவும் நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது. பேராலயத்தில் இன்று (ஏப்ரல் 2) புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி.. மதுரை மீனாட்சி கோயிலில் சாமி தரிசனம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.