மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை கீழத்தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் கோபு (45). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவர் 17 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, திருவாலங்காடு பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் ரமேஷ் (28) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே சிறுமியை திருமணத்திற்காக பெண் கேட்டுள்ளார். பெண் கொடுக்க சிறுமியின் பெற்றோர் மறுத்து விட்டனர்.
இந்தக் கோபத்தில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்து அச்சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி சென்றுள்ளார். இதனால் சிறுமிக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டது.
தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், கோபு (45) ரமேஷ் (28) ஆகிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 130 தொகுதிகளில் அதிமுக vs திமுக!