நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணக்காட்டான் வாய்க்காலில், அந்த பகுதியை சேர்ந்த சிலர் வலை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வலையில் கனமான பொருள் ஒன்று சிக்கியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக வலையை எடுத்து பார்த்தபோது இரண்டு அடி உயரமுள்ள வெண்கலத்தாலான விநாயகர் சிலை ஒன்று சிக்கியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறை, காவல்துறையினர் விநாயகர் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கக் குழு அமைக்க கோரிக்கை!