மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பல்வேறு இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து, இறுதியில் விழா குழுவின் சார்பில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் கரைக்கப்படும்.
இந்நிலையில் கரோனா பெருந்தொற்றால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் மாநில அரசு தடைவிதித்துள்ளது.
ஆர்ப்பாட்டமின்றி நடைபெற்ற கொண்டாட்டம்
அதன் காரணமாக இந்த ஆண்டு விழாவில் மூன்று அடிக்குள்ளான சிலைகளை வைத்து, அருகில் உள்ள நீர்நிலைகளில் ஒருசிலர் மட்டும் சிலைகளை எடுத்துச்சென்று கரைப்பது எனவும் பல்வேறு இந்து அமைப்பு சங்கப் பிரதிநிதிகள் முடிவுசெய்தனர்.
அதன்படி இன்று (செப்டம்பர் 9) மயிலாடுதுறையில் கோயில்கள், தனியார் மண்டபங்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில், ஐந்து அடிக்குள் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. வழக்கம்போல் அல்லாமல் இன்று விநாயகர் சதுர்த்தி ஆரவாரமின்றி அமைதியான முறையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் - ஓபிஎஸ், இபிஎஸ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து