ETV Bharat / state

வீரசக்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தி சிறப்பு பூஜைகள்! - வீரசக்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தி சிறப்பு பூஜைகள்

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி காரைக்காலில் உள்ள பிரசித்திபெற்ற வீரசக்தி விநாயகருக்கு தங்கக்கவசம் அணிவித்துச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Vinayagar chaturthi festival
Vinayagar chaturthi festival
author img

By

Published : Aug 22, 2020, 7:43 PM IST

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று (ஆக.22) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகப் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயிலில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

புகழ்பெற்று விழுங்கும் காரைக்காலில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தாக சொல்லப்படும் பிரசித்திபெற்ற வீரசக்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மூலவருக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு சந்தனக் காப்பு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும், கொழுக்கட்டை, மோதகம், உள்ளிட்ட பதார்த்தங்கள் தயார் செய்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்தனர்.

இக்கோயிலில் அண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்குப் பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்தாண்டு கரோனா ஊரடங்கால் பிரசாதம் வழங்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் அர்ச்சனை மற்றும் சிறப்புப் பூஜைகள் செய்ய அனுமதி இல்லை என்பதாலும், கரோனா அச்சம் காரணமாகவும் காலை முதலே குறைந்த அளவிலான பக்தர்களே கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மண்டியிட்டு விநாயகரை வணங்கிய யானைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.