பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, வறுமை ஒழிப்பு, தூய்மை இந்தியா, காந்தியின் கோட்பாடுகள் குறித்த பிரசார பாதயாத்திரை நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் பாஜகவினர் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
இதனை பாஜக மண்டல பொறுப்பாளர் வரதராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மங்கைநல்லூரிலிருந்து கோமல் வரை 10 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் அமிர்த விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு!